இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2019 | 1:07 pm

Colombo (News 1st) இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகையை 2,50,000 ரூபா வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என, அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜ தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழப்போருக்கு தற்போது ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையே வழங்கப்படுகின்றது.

இதனிடையே, இயற்கை அனர்த்தங்களினால் முற்றுமுழுதாக வலுவிழப்போருக்கான நிவாரணத்தொகை ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து 2,50,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இயற்கை அனர்த்தங்களின்போதும், உடனடி நிவாரணங்களுக்காக ஒதுக்கப்படும் 100 இலட்சம் ரூபாவிலிருந்து 250 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமிந்த பதிராஜ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்