கிழக்கு முனையம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை இந்தியாவா தயாரித்தது: பிமல் ரத்நாயக்க கேள்வி

by Staff Writer 07-06-2019 | 8:58 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது. இதன்போது, கிழக்கு முனையம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை இந்தியாவா தயாரித்தது எனும் பாரிய சந்தேகம் தனக்கு உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்கனவே வினவிய கேள்விகளுக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பதில்களை ஆளுங்கட்சியின் பிரதம கொரடா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதமொன்றை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இன்று கோரிக்கை விடுத்தார்.