இலங்கை - பாகிஸ்தான் இடையிலான போட்டி தாமதம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தாமதம்

by Staff Writer 07-06-2019 | 8:26 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது. பிரிஸ்டல் பிராந்திய மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இதுவரை நாணய சுழற்சியிலேனும் ஈடுபட முடியவில்லை. அங்கு தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் போட்டியை ஆரம்பிக்க முடியுமா என்பது குறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இலங்கை நேரப்படி இரவு 8.45 அளவில் இன்றைய போட்டி குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் மழை நின்றால் ஓரணிக்கு தலா 20 ஓவர்களாக மட்டுப்படுத்தி போட்டியை நடத்த முயற்சிக்கலாம் என வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இன்றைய போட்டி கைவிடப்படும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.