ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2019 | 3:24 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவது தொடர்பில் இதற்கு முன்னர் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தையே இன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் ஜகத் வௌ்ளவத்த உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டமைப்பின் கொள்கை வரைபு திட்டங்கள் தொடர்பில் இறுதி தீர்மானங்களை எடுப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறுவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்