by Staff Writer 07-06-2019 | 3:16 PM
Colombo (News 1st) இன்று முதல் நாளை (08) மறுதினம் வரை நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 150 முதல் 200 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை ஊடறுத்து இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும எனவும் திணைக்களம் கூறியுள்ளது.