சஹ்ரானின் சகோதரர்கள் உள்ளிட்ட 10 பேரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன

சஹ்ரானின் சகோதரர்கள் உள்ளிட்ட 10 பேரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2019 | 3:43 pm

Colombo (News 1st) அம்பாறை – சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்பில் உயிரிழந்த மொஹமட் சஹ்ரானின் சகோதரர்கள் உள்ளிட்ட 10 பேரின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை நீதவான் அசங்கா ஹெட்டிவத்தவின் முன்னிலையில் சடலங்களைத் தோண்டி எடுக்கும் நடவடிக்கை இன்று முற்பகல் ஆரம்பமாகியது.

குறித்த சடலங்கள் தொடர்பில் மரபணு சோதனை மேற்கொள்வதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் பழுதடைந்துள்ளமையால், மீண்டும் மாதிரிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சடலங்கள் தோண்டப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலங்களைத் தோண்டி எடுப்பதற்கான உத்தரவை கல்முனை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

சாய்ந்தமருதில் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்ததில் இவர்கள் உயிரிழந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்