திரிபோஷா தயாரிப்பிற்கான பால்மா கொள்வனவு

திரிபோஷா தயாரிப்பிற்கான பால்மா கொள்வனவு

by Staff Writer 06-06-2019 | 8:09 AM
Colombo (News 1st) திரிபோஷா தயாரிப்பிற்காக முழுமையான கிறீம் உடனான பால்மாவைக் கொள்வனவு செய்வற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காகவும் போஷாக்குக் குறைபாடுள்ள சிறுவர்களுக்காக வழங்கப்படும் போஷாக்கு உணவான திரிபோஷாவைத் தயாரிப்பதற்கு வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்குத் தேவையான 600 மெற்றிக் தொன் பால்மா கொள்வனவு செய்யப்படவுள்ளது.