சுற்றுலா ஆலோசனையை தளர்த்தியது பிரித்தானியா

இலங்கைக்கான சுற்றுலா ஆலோசனையைத் தளர்த்த பிரித்தானியா தீர்மானம்

by Staff Writer 06-06-2019 | 6:40 PM
Colombo (News 1st) இலங்கைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணிக்குமாறு வௌியிட்டிருந்த சுற்றுலா ஆலோசனையை தளர்த்துவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு பயணிப்பதாயின் அவதானத்துடன் இருக்குமாறும் நாட்டின் நிலவரம் தொடர்பில் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் தமது பிரஜைகளை பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.