ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2019 | 3:45 pm

Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் கனடா சென்று வர கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன அனுமதி வழங்கியுள்ளார்.

நீதிமன்ற பொறுப்பிலுள்ள ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸின் கடவுச்சீட்டை 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிணை முறியில் விடுவிக்குமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்