சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று

சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று

சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2019 | 7:22 am

Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று (6ஆம் திகதி) ஆஜராகுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உரைகள் மற்றும் காணொளிகளை பதிவேற்றி இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் பிரசாரங்களை மேற்கொண்டமையால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பல தடவைகளில் நிபுணர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, மதரசாக்கள் தொடர்பான நிபந்தனைகளை விதிப்பது குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகளையும் இன்று ஆஜராகுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்