by Staff Writer 05-06-2019 | 4:37 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தொடர்பான புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேயிலை தோட்டத் தரத்தை மேம்படுத்தி, தேயிலையின் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல் மற்றும் தோட்டத்துறையில் மதுபான பாவனையைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு, தௌிவூட்டும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மலையக புதிய கிராமம், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.