கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா பதவிப்பிரமாணம்

by Staff Writer 05-06-2019 | 3:21 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஷான் விஜேலால் டி சில்வா இதற்கு முன்னர் தென் மாகாண முதலமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.