இ.போ.சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள்

by Staff Writer 05-06-2019 | 10:51 AM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவையில் 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் இணைக்கப்படவுள்ளன. இதன் முதல்கட்டமாக சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 9 சொகுசு நவீன பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக 17.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 9 பஸ்கள் கட்டுபெத்த, பொலன்னறுவை, மாவனெல்ல மற்றும் மாத்தளை டிப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.