இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையின் வளங்கள் தேவை: அதாவுல்லா

by Bella Dalima 05-06-2019 | 8:52 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையினுடைய வளங்கள் தேவை என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார். திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரைக்கும் உள்ள காணிகள், கடல் வளங்கள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அம்பாறை - அட்டாளைச்சேனையில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.