இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை

இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை

இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2019 | 4:15 pm

இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வந்தார். என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய வி‌டயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ‘இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்று கூறி ஏற்கனவே விதித்த தடையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்