English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jun, 2019 | 8:05 pm
Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் கிளார்க் கூப்பர் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
உதவி இராஜாங்க செயலாளர் கிளார்க் கூப்பர் கடந்த 2 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தார்.
இவர் ஏற்கனவே நாட்டின் பல இடங்களுக்கும் சென்று முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கான விஜயத்தின் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்பிலும் ஆராய்ந்ததாக உதவி இராஜாங்க செயலாளரின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவுடனும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இராணுவ பயிற்சி குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக கிளார்க் கூப்பரின் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் சந்தித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஆர்.கிளார்க் கூப்பர் சிங்கபூரில் நடைபெற்ற Shangri La Dialogue எனும் மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னரே இலங்கை வந்துள்ளார்.
இந்திய பசுபிக் பிராந்திய சுதந்திர பிரவேசம் தொடர்பில் இந்த மாநாட்டல் கலந்துரையாடப்பட்டிருந்தது.
31 Aug, 2020 | 03:42 PM
27 Jan, 2021 | 09:58 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS