மஹிந்தானந்தவிற்கு வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு

by Staff Writer 04-06-2019 | 3:40 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. "ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ்" என்ற தொழிற்சங்கத்திற்குரிய 39 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியாளரான கஹவலகே டக்ளஸ் என்பவரிடம் மீண்டும் சாட்சியம் பெறுமாறு பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி கோரினார். அதற்கான உத்தரவு அடுத்த மதம் 25 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.