7 புதிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறை

தென் மாகாணசபை கைத்தொழில் அமைச்சின் கீழ் புதிய அபிவிருத்தித் திட்டங்கள்

by Staff Writer 04-06-2019 | 10:20 AM
Colombo (News 1st) தென் மாகாணசபை கைத்தொழில் அமைச்சின் கீழ் 7 புதிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாளாந்த மற்றும் மாதாந்த வருமானத்தைப் பெறும் சிறியளவிலான 250 கைத்தொழிலாளர்களுக்கு இதன்மூலம் நன்மை கிடைக்கவுள்ளது. நடமாடும் வர்த்தகம், விவசாயம், கால்நடை, அலங்காரப் பூக்கள் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என, தென் மாகாணசபை கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.