சிரமத்தை எதிர்கொள்ளும் கம்பஹா பகுதி நோயாளர்கள்

சத்திரசிகிச்சைப் பிரிவுகள் மூடப்பட்டமையால் சிரமத்தை எதிர்கொள்ளும் நோயாளர்கள்

by Staff Writer 04-06-2019 | 12:40 PM
Colombo (News 1st) கம்பஹா பொது வைத்தியசாலையின் அனைத்து சத்திர சிகிச்சைப் பிரிவுகளும் மூடப்பட்டுள்ளமையினால் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். கம்பஹா வைத்தியசாலையின் குளிரூட்டல் கட்டமைப்பு சில வாரங்களாக செயழிலந்துள்ளமையால் அனைத்து சத்திரசிகிச்சை பிரிவுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 8 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலையின் பிரதான கட்டடம் 2000ஆம் ஆண்டு கொரிய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டதுடன் தற்போது குறித்த கட்டடம் மிகவும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த வைத்தியசாலையில் சுமார் 800 வரையான நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தற்காலிக குளிரூட்டிகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது. இந்தநிலையில், கம்பஹா வைத்தியசாலைக்கான குளிரூட்டியை பெற்றுக்கொள்வதற்கு 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண சுகாதாக சேவைகள் பணிமனை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விலைமனு கோரலின் பின்னர் வைத்தியசாலைக்கான குளிரூட்டிகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.