அழகிய தீர்வு: புதிய கல்விக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

அழகிய தீர்வு: புதிய கல்விக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

அழகிய தீர்வு: புதிய கல்விக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

எழுத்தாளர் Bella Dalima

04 Jun, 2019 | 4:44 pm

ஹிந்தி திணிப்பிற்கு எதிரான கண்டனக் குரல்கள் தமிழகத்தில் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியைக் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டது.

இது, தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிந்தித் திணிப்பிற்கு எதிராக பல்துறை சார்ந்த பிரபலங்களும் கண்டனங்களை வௌியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகே கல்விக் குழுவின் வரைவு முன்னெடுத்துச் செல்லப்படும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருப்பதாவது,

”அழகிய தீர்வு. தமிழகத்தில் ஹிந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு என்று தெரிவித்துள்ளார்.”,

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்