மஹிந்த இன்று பிரதமரை சந்திக்கின்றார்

by Fazlullah Mubarak 03-06-2019 | 8:56 AM

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளார்.

இந்த விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தௌிவுபடுத்தியிருந்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக பொருளாதார ரீதியில் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அரசங்கம் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி மக்களுக்கு ஏதேனும் வகையில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரை சந்தித்து இன்று கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.