களனி, கிழக்கு பல்கலைகளின் பீடங்கள் மீள ஆரம்பம்

களனி, கிழக்கு பல்கலைகளின் மூடப்பட்ட பீடங்கள் மீள ஆரம்பம்

by Fazlullah Mubarak 03-06-2019 | 9:04 AM

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் உதவி பதிவாளர் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமயை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களின் கல்வி செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனினும், தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலை வழமைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களும் இன்று திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம், தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகிய பீடங்களை திறக்கப்படவுள்ளன. குறித்த பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பீடங்களும் கடந்த 30 ஆம் திகதி தற்காலிமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.