by Staff Writer 03-06-2019 | 5:26 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (3ஆம் திகதி) பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் பாரியார் மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு இன்று மாலை பக்கிங்ஹாம் மாளிகையில் பிரித்தானிய மகாராணியின் தலைமையில் அரச விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியாவின் அரச அதிகாரிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இளவரசர் சார்ள்ஸை இன்று சந்திக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் நாளைய தினம், பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயையும் சந்திக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவின் லண்டன், மென்ச்சஸ்டர், பர்மிங்ஹாம், நொட்டிங்ஹாம் ஆகிய நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.