இலங்கை வருவது தொடர்பில் ஐ.அ.இராச்சியம் எச்சரிக்கை

இலங்கைக்கு வருவது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம் எச்சரிக்கை

by Fazlullah Mubarak 02-06-2019 | 7:55 PM

இலங்கைக்குப் பயணிப்பதற்கு எதிர்பார்த்திருந்தால் அதனை பிற்போடுமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைத் தூதுரகத்தின் டுவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, கல்ப் நியூஸ் இணையம் செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.