தொடரும் ரத்தன தேரரின் உண்ணாவிரதம்! – இன்றுடன் மூன்று நாள்

தொடரும் ரத்தன தேரரின் உண்ணாவிரதம்! – இன்றுடன் மூன்று நாள்

தொடரும் ரத்தன தேரரின் உண்ணாவிரதம்! – இன்றுடன் மூன்று நாள்

எழுத்தாளர் Fazlullah Mubarak

02 Jun, 2019 | 7:48 pm

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ குழாத்தினர் , தேரரின் உடல் நிலையை நேற்றிரவு பரிசோதித்தனர்.

இன்று காலை முதல் மகா சங்கத்தினர், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ரத்தன தேரரை சந்திப்பதற்காக சென்றிருந்தனர்.

அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சிலரை அந்தப் பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரி, அத்துரலியே ரத்தன தேரர் கடந்த 31ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்