by Bella Dalima 01-06-2019 | 5:22 PM
காங்கிரஸின் மக்களவை தலைவராக சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதன்போது, சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்ததையடுத்து, அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
எனினும், அவரது இராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.