வெர்ஜினியாவில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி

by Bella Dalima 01-06-2019 | 6:06 PM
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். வெர்ஜினியாவிலுள்ள அரச கட்டடமொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெர்ஜினிய துறைமுக ஊழியர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரியும் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.​