பனை நிதியத்திற்காக 2.5 பில்லியன் ரூபா நிதி திறைசேரியிலிருந்து ஒதுக்கீடு

பனை நிதியத்திற்காக 2.5 பில்லியன் ரூபா நிதி திறைசேரியிலிருந்து ஒதுக்கீடு

பனை நிதியத்திற்காக 2.5 பில்லியன் ரூபா நிதி திறைசேரியிலிருந்து ஒதுக்கீடு

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2019 | 4:20 pm

Colombo (News 1st) பனை நிதியத்திற்காக 2.5 பில்லியன் ரூபா நிதி திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானஜோதி தெரிவித்தார்.

5 பில்லியன் ரூபா நிதி முதலீட்டில் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி பனை நிதியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

யுத்த பாதிப்புகளின் முன்னுரிமை அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பனை நிதியத்தினூடாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானஜோதி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்