அத்துரலிய ரத்ன தேரர் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

அத்துரலிய ரத்ன தேரர் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2019 | 8:19 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் நேற்று (31) தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சிலரை நீக்குமாறு வலியுறுத்தி தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரரரை சந்திப்பதற்காக முன்னாள் ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் எஸ்.பி.திசாநாயக்க உள்ளிட்ட சிலர் இன்று காலை சென்றிருந்தனர்.

தேரரின் உடல் நிலையை பரிசோதிப்பதற்காக கண்டி வைத்தியசாலையின் மருத்துவ குழாமொன்று இன்று மாலை அங்கு சென்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்