தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்கத் திட்டம்

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்கத் திட்டம்

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2019 | 5:16 pm

Colombo (News 1st) தேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

பழைய தேசிய அடையாள அட்டையில் நிலவிய பல குறைபாடுகள் புதிய தேசிய அடையாள அட்டைகளில் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தை மாற்றுதல் அல்லது முத்திரையை நீக்கி தகவல்களை மாற்றுதல் போன்றவற்றை புதிய அடையாள அட்டையில் செய்ய முடியாது என்றும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் DNA தரவு அல்லது கைவிரல் அடையாளம் போன்றவை இயற்கை தரவுகளாக பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் கை விரல் அடையாளத்தை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சட்ட ரீதியில் அனுமதி கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்