by Staff Writer 30-05-2019 | 5:41 PM
Colombo (News 1st) போக்குவரத்து சட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒரே வகையில் அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஊடகங்களில் வௌியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, சட்ட மா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக, சட்ட மா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிசாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களை செலுத்துவது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (29) சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.