புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 30-05-2019 | 6:24 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். 02. தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல் தமக்கு ஏப்ரல் 8ஆம் திகதியே கிடைத்ததாகவும் தகவல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் அறியமுடியவில்லை எனவும் சிசிர மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார். 03. வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் இதுவரை 220க்கும் ​அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 04. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கோட்டை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாஜா முஹைதீன் அல் உஸ்மான் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் மீண்டும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 05. வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளால் மன்னாரைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 06. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வெடிபொருட்கள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 07. யாழ். தென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 08. புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். 09. விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 10. சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் ஒரு இலட்சம் வரையிலான மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவங்கள் இதுவரை கிடைக்கவில்லை என, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 11. கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் பதவிக்கு முன்னாள் பிரதி மாநகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 12. கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுச் செய்திகள் 01. கறுப்புப் பட்டியலில் தம்மை இணைத்த அமெரிக்காவின் நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணம் என, ஹூவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது. 02. மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட், அந்நாட்டு சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.