கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நால்வர் கைது

கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதலில் கர்ப்பிணி உள்ளிட்ட 10 பேர் காயம்: நால்வர் கைது

by Staff Writer 30-05-2019 | 4:52 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - செல்வநகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வநகர் பகுதிக்குள் நுழைந்த குழுவொன்று நேற்று (29) பிற்பகல் 3.30 அளவில் வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மூன்று வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 6 பெண்கள் அடங்குகின்றனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.