ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு

by Bella Dalima 30-05-2019 | 6:59 PM
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்றுக்கொண்டார். விஜயவாடாவில் இந்திராகாந்தி திறந்தவௌி அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் ஆளுநர் நரசிம்மன், ஜெகன் மோகன்ரெட்டிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். கட்சி ஆரம்பித்து 9 ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன், மாநில ஆட்சியை YSR கட்சி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது