அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கையர்கள் நாடு கடத்தல்

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கையர்கள் நாடு கடத்தல்

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கையர்கள் நாடு கடத்தல்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2019 | 5:15 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் இம்மாதம் முதல் வாரமளவில் புகலிடம் கோரி கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வடமேல் கடற்பிராந்தியத்தில், அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

2013 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணித்துள்ள 186 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் இதுவரை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்