வெடிபொருட்கள் விநியோகம் மீதான தடை தளர்த்தம்

வெடிபொருட்கள் விநியோகம் மீதான தற்காலிகத் தடை தளர்த்தம்

by Staff Writer 29-05-2019 | 6:59 PM
Colombo (News 1st) ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வெடிபொருட்கள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான அளவு வெடிபொருட்களை மாவட்ட செயலாளரால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்துடன், அரச வர்த்தக வெடிபொருள், துப்பாக்கி மற்றும் ரவைகள் கொள்வனவு செய்யும் பிரிவிடம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடைமுறைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேபோல், கற்குவாரி மற்றும் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோரும் தங்களுக்கு தேவையான வெடிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட செயலாளரினால் விநியோகிக்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, வெடிபொருட்களை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய தளர்த்தப்பட்டுள்ளது.