மாலைத்தீவு சபாநாயகராக மொஹமட் நஷீட் தெரிவு

மாலைத்தீவு சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவு 

by Staff Writer 29-05-2019 | 7:23 AM
Colombo (News 1st) மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட், அந்நாட்டு சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மாலைத்தீவு பாராளுமன்றத்தில் நேற்றிரவு நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மொஹம்மட் நஷீட், அந்நாட்டின் 19ஆவது சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மாலைத்தீவின் சபாநாயகர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதியுடன் அமைச்சர் காசிம் இப்ராஹிம் ஆகியோரிடையே போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், வாக்கெடுப்பில் மொஹம்மட் நஷீட்டுக்கு ஆதரவாக 67 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் காசிம் இப்ராஹிமுக்கு 17 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 86 அமைச்சர்கள் நேற்றிரவு பதவியேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலில் 3/2 பெரும்பான்மை பலத்துடன் மாலைதீவுகளின் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றிருந்தது. இந்தநிலையில், 6 மாதங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட், மாலைதீவின் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.