கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் நியமனம்

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன நியமனம்

by Staff Writer 29-05-2019 | 7:51 AM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் பதவிக்கு முன்னாள் பிரதி மாநகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து V.K. அனுர நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து V.K. அனுரவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் V.K. அனுரவை விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்ததுடன் அதற்காக குழுவொன்றை நியமிக்குமாறும் அறிவித்திருந்ததாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். குறித்த குழுவின் பரிந்துரைக்கமைய அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்படும் வரை முன்னாள் பிரதி மாநகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன கடமையில் நீடிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்