by Staff Writer 29-05-2019 | 5:42 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை இடைநிறுத்தி, இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு குறித்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியாயமான காரணமின்றி தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதன் ஊடாக, தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, சட்ட மா அதிபர், சபாநாயகர் உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையினர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.