அமெரிக்க நீதிமன்றிடம் ஹூவாவி விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்க நீதிமன்றத்திடம் ஹூவாவி விடுத்துள்ள கோரிக்கை

by Staff Writer 29-05-2019 | 1:59 PM
Colombo (News 1st) கறுப்புப் பட்டியலில் தம்மை இணைத்த அமெரிக்காவின் நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணம் என, ஹூவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் ஏனைய நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்படலாம் என, ஹூவாவி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சோங் லியுபிங் (Song Liuping) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனாவின் ஹூவாவி நிறுவனத்தை அண்மையில் வர்த்தக கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதலின் ஒரு பகுதியாக இந்த வர்த்தகத் தடை காணப்படுகின்றது. இதற்கமைய, அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனமொன்றினால் தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதற்கு ஹுவாவி நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமது நிறுவனத்துக்கு எதிரான வர்த்தகத் தடை தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விரைவில் தீர்ப்பு வழங்குமாறு ஹூவாவி நிறுவனம், அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.