தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 May, 2019 | 12:34 pm

Colombo (News 1st) தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாம் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 – 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்டவர்களின் பதவிக் காலம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்திருந்தது.

இருந்தபோதும், நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் தேர்தல் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக செயற்குழுக் கூட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தேர்தலானது எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி நடாத்தப்படும் என, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாதன் இன்று அறிவித்துள்ளார்.

இதற்கான வாக்குப்பதிவுகள், MGR ஜானகி கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்