ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான போட்டியில் பிலிப்பைன்ஸ் வெற்றி

ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான போட்டியில் பிலிப்பைன்ஸ் வெற்றி

ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான போட்டியில் பிலிப்பைன்ஸ் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

29 May, 2019 | 7:31 pm

Colombo (News 1st) ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் முதலாம் பிரிவில் இலங்கைக்கு எதிரான போட்டியை பிலிப்பைன்ஸ் அணி வெற்றிகொண்டது.

சைனீஸ் தாய்பேயில் நடைபெற்ற இந்தப் போட்டி கிண்ணத்திற்கான காலிறுதியாக அமைந்திருந்தது.

போட்டியில் முதல் பகுதியில் 15-10 எனும் புள்ளிகள் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பகுதியில் பிலிப்பைன்ஸ் அணி மேலும் 24 புள்ளிகளைப் பெற்றது.

எனினும், இலங்கை அணியால் 12 புள்ளிகளையே மேலதிகமாகப் பெற முடிந்தது.

39- 22 எனும் புள்ளிகள் பிரகாரம், பிலிப்பைன்ஸ் அணி வெற்றியீட்டியது.

ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் முதலாம் பிரிவில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இலங்கை எதிர்வரும் முதலாம் திகதி விளையாடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்