அமெரிக்க உடன்படிக்கை தொடர்பில் அனுநாயக்கர்

பாதகமான உடன்படிக்கைக்கு இணங்கப்போவதில்லை: அமெரிக்கத் தூதுவர் அறிவித்ததாக அஸ்கிரிய பீட அனுநாயக்கர் தெரிவிப்பு

by Staff Writer 28-05-2019 | 8:46 PM
Colombo (News 1st) நாட்டிற்கு பாதகமான எந்தவொரு உடன்படிக்கைக்கும் இணங்கப்போவதில்லை என அமெரிக்கத் தூதுவர் அறிவித்துள்ளதாக, அஸ்கிரிய பீட அனுநாயக்கர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்றிருந்த போதே அனுநாயக்க தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று முற்பகல் மல்வத்து மகா விகாரையில் மல்வத்து மகாநாயக்கரை சந்தித்தார்.