மோடியின் பதவியேற்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

மோடியின் பதவியேற்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

மோடியின் பதவியேற்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

எழுத்தாளர் Bella Dalima

28 May, 2019 | 3:50 pm

டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது,

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும். இந்திராகாந்தி, ராஜிவ் காந்தியை தொடர்ந்து மக்களைக் கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன். தமிழகத்தில் செயற்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடையக் காரணம். ராகுல் காந்தி பதவி விலகத் தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயற்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்படவில்லை.

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்