பிரேசிலில் கைதிகளுக்கு இடையே கலவரம்: 57 பேர் பலி

பிரேசிலில் சிறைக்கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 57 பேர் பலி

by Bella Dalima 28-05-2019 | 3:39 PM
பிரேசிலில் சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 57 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலின் அமேசோனாஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. இதனால் அங்கு குற்றச் சம்பவங்களும் அதிகம் இடம்பெறுகின்றன. இதன்போது கைதாவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அங்குள்ள சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். இந்த நிலையில், நேற்று (27) அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸில் உள்ள நான்கு சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக கைதிகளை சிறைகளில் கொண்டுள்ள நாடாக பிரேசில் திகழ்கிறது. இங்கு மொத்தம் 368,049 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்