‘The Palme d’Or’ விருதை சுவீகரித்தார் தென் கொரிய இயக்குநர் போங் ஜூன் ஹோ

‘The Palme d’Or’ விருதை சுவீகரித்தார் தென் கொரிய இயக்குநர் போங் ஜூன் ஹோ

‘The Palme d’Or’ விருதை சுவீகரித்தார் தென் கொரிய இயக்குநர் போங் ஜூன் ஹோ

எழுத்தாளர் Staff Writer

26 May, 2019 | 1:04 pm

இந்த வருடத்திற்கான கேன்ஸ் (Cannes) விருதினை தென் கொரிய இயக்குநர் ஒருவர் பெற்றுள்ளார்.

போங் ஜூன் ஹோ (Bong Joon-ho) என்பவர் இயக்கிய பரசைட் என்ற அவலம், நகைச்சுவை, திகில் ஆகியனவற்றைப் பிரதிபலிக்கும் படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Cannes திரைப்பட விழாவில் வழங்கப்படும் மிகவும் மதிப்புக்குரிய விருதாகிய ‘த பால்மி டோர்’ (The Palme d’Or) விருதை அவர் பெற்றுள்ளார்.

11 நாட்கள் நடைபெற்று நிறைவுக்கு வந்த Cannes திரைப்பட விழாவில் புதிய திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் ஆகியன திரையிடப்பட்டன.

அத்துடன், 72 வருட Cannes வரலாற்றில் மட்டி டியோப் (Mati Diop) என்ற கறுப்பின பெண்ணும் முதல்தடவையாக விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்