பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

by Staff Writer 26-05-2019 | 9:00 AM
Colombo (News 1st) இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 31 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தலா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். லோகேஷ் ராகுல், அணித்தலைவர் விராத் கொஹ்லி, மஹேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக் ஆகிய நட்ச்சத்திர வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இந்திய அணி 22.3 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது. ஆனாலும், ரவிந்ர ஜடெஜா 54 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார். குல்தீப் யாதவ் 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவீச்சில் ட்ரென் பௌல்ட் 4 விக்கெட்களையும் ஜேம்ஸ் நீசாம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 37.1 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 67 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார்.