ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியாவிற்கு சென்றதாக தகவல்?

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியாவிற்கு சென்றதாக தகவல்?

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியாவிற்கு சென்றதாக தகவல்?

எழுத்தாளர் Fazlullah Mubarak

26 May, 2019 | 8:36 pm

Colombo (News 1st) ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிலர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் சொந்தமான இலட்சத்தீவிற்குச் சென்றுள்ளதாக, இந்திய புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குச் சொந்தமான இலட்சத்தீவுகளை சென்றடைந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்து, இந்தியாவின் கேரளாவில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதற்கமைய, கரையோர பொலிஸ் நிலையங்கள், மாவட்ட கரையோர பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு இந்திய பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 23ஆம் திகதியிலிருந்து இந்திய கரையோர பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, கேரளாவில் ஈரான் மற்றும் சிரியாவிலிருந்து வந்த ஐ.எஸ். உறுப்பினர்கள் சிலர் உள்ளதாக புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்