ஆயுதங்களை சவுதிக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் அனுமதி

8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை சவுதிக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் அனுமதி

by Staff Writer 25-05-2019 | 5:28 PM
8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை சவுதிக்கு விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார். ஈரானுடனான பதற்ற நிலைமை அதிகரித்துள்ள நிலையில், சவுதிக்கான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதியளித்துள்ளார். இத்தகைய ஆயுத விற்பனையை மேற்கொள்ளும் போது காங்கிரஸின் அனுமதியைப் பெற வேண்டிய நிலையில் , ஈரானுடனான பதற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ட்ரம்ப் நேரடியாக அனுமதி வழங்கியுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.