by Staff Writer 25-05-2019 | 5:37 PM
Colombo (News 1st) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜரானார்.
இன்று முற்பகல் 10 மணி முதல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மாலை 4.30 அளவில் அவர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளில் லக் சதொச நிறுவனத்திற்கு 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.